முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வுக்கு காரணமான இந்திய தொடர்: பிராவோ வெளியிட்ட பரபரப்பு தகவல்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கரீபியன் : 2014-ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின்போது அதிகாலை 3 மணிக்கு என்.சீனிவாசன் தன்னை அழைத்து போட்டியில் களமிறங்கச் சொன்னதாக பிராவோ பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

போட்டிகள் ரத்து

2014-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, 5 ஒருநாள், ஒரு டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தொடரின்போது, அக்டோபர் 17-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நடந்து முடிந்ததும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தங்களது வீரர்களை நாடு திரும்புமாறு அறிவித்தது. வீரர்களின் ஊதிய பிரச்னை காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் நிறுத்திக்கொண்டது. இதனால், டெஸ்ட், டி-20 தொடர்கள் ரத்தாகின.

விளையாடினோம்...

மேற்கிந்திய தீவுகள் அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த டுவைன் பிராவோ, கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்-ல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த பிராவோ, “எங்களுடைய ஊதியத்தை 75% குறைக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ததால், முதல் ஒருநாள் போட்டியிலேயே நாங்கள் விளையாடக் கூடாது என்று நினைத்தோம். ஆனால், அப்போதைய பி.சி.சி.ஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன் எனக்கு அதிகாலை 3 மணிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். தயவுசெய்து களத்தில் இறங்குமாறு கேட்டுக்கொண்டதால் அன்று விளையாடினோம்” என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நான் மட்டுமே...

மேலும், “அப்போது நடைபெற்ற அனைத்து சம்பவங்களுக்கும் நான் மட்டுமே பாதிக்கப்பட்டேன். என்னால் மட்டுமே மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாமலேயே போய்விட்டது” என்று வேதனையாக பிராவோ கூறினார். இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பிறகு, பிராவோ சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடவேயில்லை. தொடர்ந்து, ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து