முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களுக்கு வழிகாட்டும் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,மீனவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.சென்னை மகாஜன சபை சார்பில் முப்பெரும் விழா ( 135-ஆவது ஆண்டு விழா, காமராஜர் விழா, மகாகவி பாரதியார் விழா ) மயிலாப்பூரில்  நடைபெற்றது. விழாவையொட்டி இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சா.பாஸ்கரன் வழங்கிப் பாராட்டினார்.

விருதைப் பெற்றுக் கொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதற்கு காரணம் கூட்டு முயற்சிதான். கடந்த புதன்கிழமை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதேபோல் அடுத்தடுத்து விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.வரும் டிசம்பர் 4-ஆம் தேதி ஜிசாட்-11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டமும், வரும் ஜனவரி மாதத்தில் சந்திராயன் - 2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டமும் உள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஜி சாட் செயற்கைக்கோள் மூலம் கிராமங்களில் அதிவேக இணையதள வசதி மற்றும் தொலைத்தொடர்பு மேம்படுத்தப்படும். மீனவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும். டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு தற்போது அனுப்பப்படும் ஜி சாட் செயற்கைக்கோள்கள் பெரிதும் பயன்படும்.என்றார் அவர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து