முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை : மலையாள மாதமான விருச்சிகம் மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில் நடை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டது.

இதற்கிடையே, கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக வந்த ஹிந்து இயக்க மூத்த பெண் தலைவர் சசிகலாவை கேரள காவல்துறையினர் கைது செய்தனர். அதைக் கண்டித்து மாநிலத்தின் பிற பகுதிகளில் 12 மணி நேர முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், பக்தர்களின் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக இதுவரை எந்தவொரு இளம்பெண்ணும் கோயிலுக்கு செல்ல இயலவில்லை.

இந்நிலையில், 2 மாத கால மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோயிலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரியின் மேற்பார்வையில், சனிக்கிழமை அதிகாலையில் அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டன.

சன்னிதானம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து