முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட குழுக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கடலூர்,கஜா புயலால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.கஜா புயலால், கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கடற்கரையோரப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய மீன்வளத் துறையினருக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அமைச்சர் டி.ஜெயக்குமார்  கடலூர் முதுநகர் துறைமுகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேதமடைந்த படகுகளை பார்வையிட்ட அவர், புயல் பாதிப்பு குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:கடலூர் மாவட்டத்தில் 49 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. மொத்தமுள்ள 4,871 மீன்பிடிப் படகுகளில் இயந்திரம் பொருத்தப்பட்ட 14 நாட்டுப் படகுகள் கஜா புயலால் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. இந்தச் சேதங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய அறிக்கை பெறப்பட்டதும், இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயலால் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதம் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் துணை இயக்குநர் (மீன் வளம்) தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் கீழ் உதவி இயக்குநர்கள் தலைமையில் 22 துணை குழுக்களும், அவர்களின் கீழ் 100 அலுவலர்களும் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல, பல்வேறு துறைகளிலும் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் அறிக்கைகளைப் பெற்று, அதன்படி இழப்பீடு குறித்து கணக்கிடப்பட்டு, மத்திய அரசிடம் கோரப்படும். இதற்காக, தமிழக முதல்வர் டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். கடலூர் முதுநகர் துறைமுகத்தில் அதிகளவு நெருக்கடி உள்ளதால் ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம் 2019-2020 ஆம் ஆண்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்த தேசிய அளவில் தடைச் சட்டம் உள்ளது. எனவே, சட்டத்தின்படி அனைத்து மீனவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து