முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கண்டி,17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரைக் வென்றது இங்கிலாந்து அணி.கண்டியில் நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோய் ரூட்டின் அபாரமான சதம், சுழற்பந்து வீச்சாளர்கள் லீச், மொயின் அலி ஆகியோரின் பந்துவீச்சு ஆகியவற்றால் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்தே 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.இதன் மூலம் கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் தொடரை இலங்கையில் இப்போதுதான் இங்கிலாந்து வென்றது. இதற்கு முன் 2001-ம் ஆண்டு நாசர் ஹுசைன் தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.  ஆசிய கண்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வென்றது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்று கைப்பற்றியுள்ளது. 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்து அணியைக் கவுரமான ஸ்கோரை எட்ட உதவிய ரூட் ஆட்ட நாயகனராக அறிவிக்கப்பட்டார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மொயின் அலி காணப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு அடுத்த இடத்துக்கு இங்கிலாந்து முன்னேறும். கண்டி மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 336 ரன்கள் சேர்த்து, 46 ரன்கள் முன்னிலை பெற்றது. 46 ரன்கள் பின்னடைந்த நிலையில் 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. ஆனால், கேப்டன் ஜோய் ரூட் நிதானமாக பேட் செய்து சதம் அடித்து அணியை வழி நடத்தினார். இந்த இன்னிங்ஸில் ரூட்டின் 124 ரன்கள், பர்ன்ஸ 59 ரன்கள், போக்ஸ் 65 ரன்கள் சேர்த்து அணியைக் காத்தனர். 2-வது இன்னிங்ஸில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி .இதையடுத்து, 301 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கையின் முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கருணா ரத்னே 57, மெண்டிஸ் 88 ரன்களும் சேர்த்து அணியை வழிநடத்தினார்கள். ஆனால், அடுத்துவந்த வீரர்கள் மோசமாக பேட் செய்ததால், 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் சேர்த்திருந்தது.இலங்கை மைதானம் வேகப்பந்துவீச்சு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கமாக இருந்ததால், லீச், மொயின் அலி, ரூட் ராஷித் கான் ஆகியோர் ராஜ்ஜியமாக இருந்தது. இலங்கை மண்ணில் அந்த அணி வீரர்களுக்குப் பந்துவீச்சில் கடும் நெருக்கடி அளித்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 226 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் விளிம்பில் இலங்கை அணி இருந்தது. வெற்றிக்கு 75 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கையில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.விக்கெட் கீப்பர், டிக்வெலா 35 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆனால், லீச், மொயின் அலி பந்துவீச்சில் அடுத்தடுத்து கடைசி வரிசை வீரர்களான லக்மால்,புஷ்பகுமாரா, பெரேரா ஆகியோரின் விக்கெட்டுகள் சரிய ஆட்டம் 32 ரன்களில் முடிவுக்கு வந்தது. 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் லீச் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்டில் 8 விக்கெட்டுகளை லீச் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து