முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி இந்திய வீராங்கனை முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி,உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் கால் இறுதியின் முந்தையச் சுற்றுக்கு இந்திய வீராங் கனை சோனியா லேத்தர் முன்னேறியுள்ளார்.

டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாக மைதானத் தில் உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெதர் வெயிட் 57 கிலோ எடைப் பிரிவில் சோனியா லேத்தரும், மொராக்கோ வீராங்கனை தவுஜானி தோவாவும் மோதினர். இதில் சோனியா லேத்தர் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தவு ஜானியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்தார். ஆட்டம் முழுவதிலும் சோனியா ஆதிக்கம் செலுத்தினார்.சோனியா விட்ட பல்வேறு குத்துக்களால் நிலைகுலைந்த தவு ஜானி, ஒரு புள்ளியைக்கூட பெற முடியவில்லை. இறுதியில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் சோனியா வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில் சோனியா, 57 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தார்.54 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மணீஷா மவுன் ஏற்கெனவே கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீராங்கனை சரிதா தேவி 60 கிலோ லைட் வெயிட் பிரிவில் கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோமும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து