முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஷோகி படுகொலை குறித்த அமெரிக்க புலனாய்வு அறிக்கை இன்று வெளியீடு அதிபர் டிரம்ப் திட்ட வட்டம்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பான அமெரிக்க புலனாய்வு விவரங்கள் அடங்கிய அறிக்கையை இன்று 20-ம் தேதி வெளியிடவிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.துருக்கியிலுள்ள சவுதி துணைத் தூதரகத்தில் நடைபெற்ற அந்தப் படுகொலையில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, கலிபோர்னியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடச் சென்ற அதிபர் டிரம்ப், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-செய்தியாளர் கஷோகி படுகொலை மிகவும் கோரமான சம்பவம் ஆகும். செய்தியாளர்கள் ஒருபோதும் கொல்லப்படக் கூடாது.கஷோகி படுகொலை தொடர்பாக சி.ஐ.ஏ அதிகாரிகள் இன்னும் இறுதியான முடிவுக்கு வரவில்லை. அதற்குள், அந்தப் படுகொலைக்கு சவுதி இளவரசர்தான் காரணம் என்று சி.ஐ.ஏ. முடிவுக்கு வந்துள்ளதாக இப்போதே கூற முடியாது.இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் பேசுவேன். இது தொடர்பான முழுமையான அறிக்கை செவ்வாய்க்கிழமை (நவ.20) வெளியிடப்படும்.அந்த அறிக்கையில், கஷோகி படுகொலைக்கு உத்தரவிட்டவர்கள் யார், அந்த உத்தரவை செயல்படுத்தியது யார், அந்தப் படுகொலை சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து