முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த, கால அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்ட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது கோவிலுக்கு செல்ல முயன்ற சில இளம்பெண்கள் இந்து அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, ஆர்வலர் திருப்தி தேசாய் உள்ளிட்ட சக ஆர்வலர்களும் சபரிமலை செல்ல, புனேயில் இருந்து கொச்சி வந்தனர். பல்வேறு அமைப்வை சேர்ந்தவர்களின் எதிர்ப்பால் அவர்கள் சபரிமலை செல்லாமல் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்தது.அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மண்டல பூஜை வழிபாட்டை அமைதியாக நடத்தும் நோக்கில் உடனடியாக தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் காலஅவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து