முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லுவின் உடல் நிலையில் பின்னடைவு ராஞ்சி மருத்துவமனை டாக்டர்கள் தகவல்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி,ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத்துக்கு காலில் கடுமையான கொப்பளங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அதன் விளைவாக அவரது உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கடந்த மூன்று நாள்களாகவே அவருக்கு ரத்த அழுத்தமும், ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்த வண்ணம் இருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்சூலின் உள்ளிட்ட மருந்துகள் கூடுதலாக செலுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி, சிறுநீரகப் பிரச்னையாலும் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.இதனால், எழுந்து நடமாட இயலாத நிலை லல்லுவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கொப்பளங்கள் குணமாக மேலும் சில நாள்களாகும் என்றும், அதன் பிறகே மற்ற சிகிச்சைகளை தொடர முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து