முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐயப்ப பக்தர்கள் குழுவாகச் செல்வதையும் பாடல்கள் பாடுவதையும் தடுக்கக் கூடாது காவல்துறைக்கு கேரள நீதிமன்றம் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,ஐயப்ப பக்தர்கள் குழுவாகச் செல்வதையும், ஐயப்பன் பாடல்கள் பாடுவதையும் தடுக்கக் கூடாது என்று கேரள காவல்துறையை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்ட போது சபரிமலைக்கு வந்த பெண்கள் பலர் இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு நடை மூடப்பட்டது.இந்நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்க, சபரிமலையைச் சுற்றியுள்ள பம்பா, நிலக்கல், இலவங்கல், சன்னிதானம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கூடுதல் டிஜிபி, 2 ஐ.ஜி.க்கள் தலைமையில் பெண் போலீசார் உட்பட 2,000 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர், ஐயப்ப பக்தர்கள் குழுவாகச் செல்வதையும், ஐயப்பன் கீர்த்தனைகளைப் பாடுவதையும் தடுக்கின்றனர்.பக்தர்களைக் கைது செய்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், ஐயப்ப பக்தர்கள் குழுவாகச் செல்வதையும், ஐயப்பன் பாடல்கள் பாடுவதையும் தடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக ஐயப்பனைத் தரிசிக்காமல் பல்வேறு மாநிலத்தினர் ஊர் திரும்பியுள்ளனர். 144 தடை உத்தரவு முதலில் எதற்குப் பிறப்பிக்கப்பட்டது என்றும் கேரள அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து