முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"கஜா புயல்" பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை தரவுவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஆய்வு...தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கஜா புயல் கரையைக் கடந்த போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த காற்று, கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  

பிரதமரை சந்தித்தார்....இதைத் தொடர்ந்து, புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரண நிதி கோருவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, முதல்வர் விமானம் மூலம் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.50 மணியளவில் டெல்லி சென்றந்தார். நேற்று காலை 9.45 மணியளவில் டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்தார். அப்போது, கஜா புயல் பாதிப்பு, சேதம் குறித்து எடுத்துக் கூறி, தமிழகத்திற்கு தேவையான புயல் நிவாரண நிதியை வழங்கக் கோரி வலியுறுத்தினார்.

பேரிடர் பாதித்த...இது தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் நிதித் துறை தயாரித்துள்ள அறிக்கையையும் பிரதமரிடம் அளித்த முதல்வர் பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி அளிக்கவும், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார். மேலும் புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்கவும், புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

நாளை வருகை...இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை சார்பில் அனுப்பப்பட உள்ள நான்கு பேர் கொண்ட குழுவிற்கு மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிபின் பிஹாரி மாலிக் தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தமிழகம் வரவுள்ள இக்குழுவானது நாளை (சனிக்கிழமை ) காலை முதல்வர் பழனிசாமியை, தலைமைச்செயலகத்தில் சந்திக்க உள்ளது. அதற்கு பிறகே கஜா புயல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிடுவதற்காக அக்குழு புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து