முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் அயோத்தியில் ராமர் கோயில் பணி துவங்கும் உ.பி. பா.ஜ.க. எம்.எல்.ஏ அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,அயோத்தியில் நாளை (25-ம் தேதி) முதல் ராமர் கோயில் பணி தொடங்கப்பட உள்ளதாக உ.பி.யின் பைரியா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங் அறிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 29-ம் தேதி முதல் ராமர் கோயில் மீதான மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது. இது அடுத்த வருடம் ஜனவரிக்கு என ஒத்தி வைத்ததன் காரணமாக இந்துத்துவா அமைப்பினர் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். இதனால், ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றக்கூறி மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, (நாளை) 25-ம் தேதி அயோத்தி, நாக்பூர் மற்றும் பெங்களூரூவில் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) சார்பில் தர்மசபை நடத்தப்பட உள்ளது.இந்நிலையில், தர்மசபையில் கலந்து கொள்ள பா.ஜ.க.எம்.எல்.ஏ.வான சுரேந்திரா சிங் தம் ஐந்தாயிரம் ஆதரவாளர்களுடன் அயோத்திக்குச் செல்கிறார். அங்கு ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறும்போது, ராமருக்கு அடுத்தபடியாகத் தான் சட்டம் உள்ளது. இதை நாம் கடந்த 1992-ல் காட்டி இருந்தோம். இதை மீண்டும் பைரியாவினர் இந்து புரட்சியில் கலந்துகொண்டு (நாளை) 25-ம் தேதி காட்ட உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து