முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்துக்குள் ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் சிகிபோரா பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலரது நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர், மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட இதர விபரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து