முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநில கலாச்சாரத்தை காங்கிரஸ் கிண்டல் செய்கிறது மிசோராம் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐசால்,வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்கிறது என்று மிசோரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா முழுக்க ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. தெலுங்கானா, மத்திய பிரதேம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் மிசோராம் தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மிகவும் தீவிரமாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.இந்த தேர்தல் காரணமாக மிசோராமில் பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மிசோராம் மாநிலம் லாங்லெய் பகுதியில் பிரச்சாரம் செய்தவர் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில், கடந்த நான்கு வருடங்களில் பா.ஜ.க. அரசு வடகிழக்கு மாநிலத்திற்கு நிறைய நன்மைகளை செய்து இருக்கிறது. உங்கள் கலாச்சாரத்தை நாங்கள் பெரிய அளவில் மதித்து இருக்கிறோம். உங்களது கலாச்சாரத்தை பா.ஜ.க. உலகறியச் செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் உங்களுக்கு எதிராக செயல்படுகிறது.

உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறது.காங்கிரஸ் உங்களது கலாச்சாரத்தை கிண்டல் செய்வதை என்னால் ஏற்க முடியவில்லை. நான் வடகிழக்கு மாநில மக்களின் உடையை அணிந்தால் கிண்டல் செய்கிறார்கள். அது என்னை கிண்டல் செய்வது கிடையாது. உங்களை கிண்டல் செய்வது. உங்களது உடை காங்கிரஸ் கட்சிக்கு கேலிப்பொருளாக உள்ளது. உங்களை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்யும் போது பெரிய அளவில் எனக்கு கோபம் வருகிறது. வடகிழக்கு மாநிலங்களை முன்னேற்றியது நாங்கள்தான்.உங்களுக்கு இன்னும் சாலை வசதி, ரயில் வசதி, விமான வசதி, மருத்துவ வசதி அதிகம் ஏற்படுத்திக் கொடுப்போம். உங்களது முன்னேற்றம்தான் இந்தியாவின் முன்னேற்றம் என்று பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து