முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜம்மு - காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.மைனஸ் டிகிரி வெப்பநிலை நிலவி வருகிறது. ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு குறைந்த பட்சமாக மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. காஷ்மீரில் ஆண்டுதோறும் அமர்நாத் யாத்ராவிற்கு செல்லும் வழியில் உள்ள பஹல்கம் மலை முகாம் பள்ளத்தாக்கில் மைனஸ் 4.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், நான்கு நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் எனவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடும் பனியால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. அதே நேரம், குடிநீர் பனிக்கட்டிகளாக மாறி வருகின்றன. வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கண்களை மறைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து