முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதியில் 250 மீட்டர் உயரத்தில் அமைகிறது ஆந்திர சட்டசபை

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : அமராவதியை உலகின் மிக அழகிய தலைநகராக உருவாக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீர்மானித்துள்ளார். இதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள பிரபல கட்டிடக்கலை நிறுவனங்கள் மூலம் திட்டமிடப்பட்டு வருகிறது.

இதில் ஆந்திர சட்டசபையின் இறுதி வடிவத்துக்கு சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியதாக, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா அமராவதியில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, உலகில் மிக உயரமான கட்டிடமாக அமராவதியில் சட்டசபை அமையவுள்ளது. 250 அடி உயரத்தில் நார்மன் போஸ்டர்ஸ் கட்டிட நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது.

இதில் 3 மாடிகளில் சட்டசபை நிறுவப்படும். நடுவில் உலகிலேயே உயரமான கோபுரம் (டவர்) அமைய உள்ளது. இதன் மொத்த உயரம் 250 மீட்டராகும். இதற்கான டெண்டர் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும். இந்தக் கட்டிடம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்றார்.

குஜராத்தில் 182 மீட்டர் உயர சர்தார் வல்லபபாய் படேல் சிலை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது இதுவே உலகின் மிக உயரமான சிலையாக உள்ளது. இதை விட 68 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக ஆந்திர சட்டசபை கட்டிடம் அமையவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து