முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசிய விமான விபத்தில் பலியான இந்திய விமானியின் உடல் கண்டுபிடிப்பு - அமைச்சர் சுஷ்மா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன் விமானத்தை இயக்கிய இந்திய பைலட் பாவ்யா சுனேஜாவின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு கடந்த அக்டோபர் மாதம்  29-ம் தேதி புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த தேடுதலில் விமானத்தை இயக்கிய இந்திய கேப்டன் பாவ்யே சுனேஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய இந்திய விமான பாவ்யா சுனேஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் சுனேஜாவின் உடல், அவரின் குடும்பத்தாரிடம் இந்திய தூதரகம் மூலம் ஒப்படைக்கப்படும். சுனேஜாவின் குடும்பத்தாருக்கு என ஆழ்ந்த வருத்தங்கள் என அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து