முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் நிவாரணத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ. ஒரு கோடி நிதியுதவி- முதல்வரிடம் துணை முதல்வர் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை முதல்வரிடம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.

நன்கொடை...

தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

ரூ.1 கோடி நிதியை...

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. கஜா புயல் நிவாரணத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி  நிதியை முதல்வர் பழனிசாமியிடம், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வழங்கினார். இதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜெயலலிதா பேரவை சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் உதயகுமார் நேற்று வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து