முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடையாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வில் இல்லை

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் நடன இயக்குனராகவும் விளங்குபவர் காயத்திரி ரகுராம். இவர் குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் அபராதம் செலுத்தியதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை மறுத்த காயத்திரி ரகுராம் தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜ.க.வில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று குற்றம் சாட்டினார். காயத்திரி ரகுராம் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பதால் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை, காயத்திரி ரகுராம் பாரதீய ஜனதாவிலேயே இல்லை என்று பதில் அளித்தார். இந்த கருத்துக்கு காயத்திரி ரகுராம் கோபமாக பதில் அளித்துள்ளார்.

அதிகாரம் இல்லை

இது தொடர்பன அவரது டுவிட்டர் பதிவில் அன்புள்ள தமிழிசை மேடம், நான் பாரதீய ஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி. இரண்டாவதாக தமிழக பா.ஜ.க. யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக் கூடாதா என்ன? நான் பாரதீய ஜனதாவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டு விட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் பதிலளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், நடிகை காயத்ரி ரகுராம் பாரதீய ஜனதாவில் கிடையாது. வேண்டுமென்றால் டெல்லியில் புகார் சொல்லலாம். பிக்பாஸில் பங்கேற்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்த அன்றே விலகி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து