முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

பலரும் உதவிக்கரம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவியை தவிர தன்னார்வலர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். இருப்பினும் வீடு, உள்ளிட்ட உடைமைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதால் மக்கள் அன்றாட உணவிற்கே திண்டாடுகின்றனர்.

முதல்வர் ஆய்வு

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை கடந்த 20-ம் தேதி ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி நேற்று நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்து மக்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

இன்று ஆய்வு

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இன்று தமிழகம் வரும் நிர்மலா சீதாராமன் பிற்பகலில் தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து