முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

நாகை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று நாகை மாவட்ட விவசாயிகள், பெண்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

பெண்களிடம் ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார். புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. ஒரு கோடி நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் முதலில் புயலால் சேதமான பிரதாபராமபுரம் பகுதிக்கு சென்றார். அங்கு புயலால் வீடுகளை இழந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பெண்கள், வீடுகளை இழந்து குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகின்றனர். மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம் என்றனர். இதை கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அனைவருக்கும் உதவி

தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. புயலால் நாகை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கும். கிராமங்களுக்கு மின்சாரம் , குடிநீர் விரைவில் வழங்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு ஆறுதல்

பின்னர் பொதுமக்கள் சிலர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட அவர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து விழுந்த மாவடி கிராமத்துக்கு முதல்வர் எடப்பாடி சென்றார். அங்கு புயலால் சேதமான தென்னை, மா மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது விவசாயிகள், எங்களது வாழ்வாதாரமே போய் விட்டது. இதில் எப்படி மீண்டு வர போகிறோம் என்று தெரியவில்லை.

தேவையான உதவியை...

அதிகாரிகள் விரைந்து கணக்கெடுத்தால் தான் நிவாரணம் கிடைக்கும் என்று கூறினர். இதை கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயல் பாதித்த பகுதிகளில் எல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு நடத்தி நிவாரண பணிகள் துரிதப்படுத்தி வருகிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு தேவையான உதவியை செய்யும். விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.

கண்ணீர் மல்க வேதனை

இதையடுத்து வேட்டைகாரனிருப்பு கிராமத்தில் அரசு நிவாரண முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பெண்கள் அனைவரும் கண்ணீர் மல்க தங்களது வேதனையை தெரிவித்தனர். வீடு, வாசல், தோப்பை இழந்து விட்டோம். இனி அரசு முகாமில் அடுத்த வேளை உணவுக்காக காத்திருக்கிறோம். ஆடு, மாடுகளை இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து வருமானமின்றி தவிக்கிறோம். அரசு நிவாரணம் அளித்தால் தான் எங்களுக்கு வாழ்க்கையே என்று கூறினர். இதை பொறுமையுடன் கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்படும். மின்கம்பங்கள் நடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தானிய சேமிப்பு கிடங்கு...

இதன்பிறகு கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தானிய சேமிப்பு கிடங்கை பார்வையிட்டார். சுமார் ரூ.151 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்கு முற்றிலும் சேதமாகியிருப்பதை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த சேதமான நெல் மூட்டைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார். பிறகு வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், பெரிய குத்தகை, வேதாரண்யம், வாய்மேடு ஆகிய பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து