முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல அளவிலான டேக்வோண்டா போட்டி மாணவர் அபினேஷ்சர்மா தங்கம் வென்று சாதனை

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வோண்டா போட்டியில் நேசனல்அகாடமி பள்ளி மாணவன் அபினேஷ்சர்மா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளான்.
    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 2018-2019 கல்வியாண்டிற்கான   மண்டல அளவிலான டேக் வோண்டா  போட்டி ராமநாதபுரத்தில் நேஷனல் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை , விருதுநகர், ஆகிய மாவட்டங்களைச் சார்ந்தசுமார் 500 , பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளை நேஷனல் அகாடமி  பள்ளிகளின் தாளாளர் டாக்டர்  செய்யதா மற்றும் முதல்வர் ராஜமுத்து ஆகியோர்கள் துவக்கி வைத்தனர். இப்போட்டியை சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி , தேசிய நடுவர் பாஸ்கரன், கன்னியாகுமரி மாவட்டநடுவர்  சங்கர் குமார்,  ராமநாதபுரம் நடுவர் கர்ணன் ,ரமேஷ்பாபு ,ராஜா ரமேஷ் முகமது உசேன் ஆகியோர் நடத்தினர். காலையில் நடைபெற்ற முதல் ஆட்டப்போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட 45 கிலோ எடைப்பிரிவு  போட்டியில் ராமநாதபுரம் நேஷனல் பள்ளி  மாணவர் அபினேஷ்சர்மா முதல் இடம் பிடித்து தங்கம் மற்றும் சான்றிதழ் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், மாநில அளவிலான  விளையாட்டு போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளார். மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 4 ,5 ,6  ஆகிய நாட்களில் திருப்பூரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
    ராமநாதபுரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான  டேக் வோண்டா போட்டியில் முதல்முறையாக எலக்ட்ரானிக் ஸ்கோர் சிஸ்டம் என்ற மதிப்பெண்களின் எலக்ட்ரானிக் கருவியை ராமநாதபுரத்தில் மண்டல போட்டிக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர். இப்போட்டியில் கலந்து கொள்ள விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அபிராமம் முஸ்லிம் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் உசேன்,  உடற்கல்வி  இயக்குனர் அன்சாரி ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இப்போட்டியில் வெற்றி பெரும் அனைவரும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து