முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக 90 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து  6583 ஏக்கர் பாசனத்திற்காக 90 நாட்களுக்கு 70 கனஅடிவீதம் தண்ணீர் கலெக்டர் வினய் திறந்து வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அய்யம்பாளையம் மருதாநதியிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் உத்தரவின் பேரில் ஆத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி மூன்று வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 5943, நிலக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 640 ஏக்கர் ஆக 6583 ஏக்கர் பாசன நிலங்களுக்கு விவசாயிகள் பயன்பெறும் விதமாக 90 நாட்களுக்கு 70 கனஅடி வீதம் முதல் போன சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் மின்சார பெத்தானை அழுத்தி சங்கு ஒலித்த சட்டரை திறந்து வைத்தார்.  அதன் பின்பு திறந்த விடப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் மஞ்சளாறு வடிநிலக்கோட்டை செயற்பொறியாளர் குமார், திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், உதவி பொறியாளர் மோகன்தாஸ், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஜெயச்சந்திரன், தாசில்தார் பிரபா, அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், சேவுகம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல்,  கிராம நிர்வாக அலுவலர் மாதவன், ராஜ வாய்க்கால் தாமரைக்குளம், கோபாலசமுத்திரம், சிறுவன்குளம், ரெங்கசமுத்திரம், கருங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் செல்கிறது. மேற்கண்ட 6 பாசன பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து