முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத்தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் கூட்டத்தின் தொடக்கவிழா அமைச்சர் க.பாண்டியராசன் துவக்கி வைத்தார்.

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை -மதுரை மாவட்டம், உலகத்தமிழ்ச் சங்கம் பெருந்திட்ட வளாகத்தில், உலகத்தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் வளம் குறித்து கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ள தமிழ்க்கூடல் எனும் வாரந்தோறும் தமிழாய்வுக் கூட்டத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்  தமிழ் ஆட்சிமொழி அமைச்சர்  க.பாண்டியராசன்  துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
  யுனெஸ்கோவின் கணக்கெடுப்பின் படி, உலகமொழிகளில் தமிழ்மொழி 14ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்மொழியை 10ஆவது இடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை செயல்பட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள்;, மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் உலகத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பெற்று வந்த இளந்தமிழர் இலக்கியப் பட்டறை இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பெறும். இந்த இலக்கியப் பட்டறையானது தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திலும் நடத்தப்பெறும்.
  தமிழ்க்கூடல் எனும் நிகழ்ச்சி வாரம் ஒரு முறை என இந்த வருடம் முழுவதும் 48 நிகழ்ச்சிகள் மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.  தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட பழங்குடியினர் பண்பாட்டு மையம் சார்பில் உதகையில் தற்பொழுது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துறை மூலம் தோடர் இன பழங்குடியினர் குறித்த கலாச்சார ஆய்வு நடைபெற்று வருகிறது.  சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு தொடங்க இருக்கிறது.  மொத்தம் 14500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.  விரைவில் 4வது கட்ட அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து விடும். 

 முதற்கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மைசூரிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சென்னை தலைமைச்செயலக வளாகத்திலும், 4வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கீழடி அரசு பள்ளி வளாகத்திலும் முழு பாதுகாப்போடு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.  சில பொருட்கள் கால அளவீடு செய்ய அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.  வருகின்ற மார்ச் மாதத்திற்குள் கீழடியில் அகழ் வைப்பகம் அமைப்பதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மதுரை காந்தி மியூசியம், சென்னை கோட்டை அருங்காட்சியகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 36 அருங்காட்சியகங்களோடு புதிதாக அரியலூரில் விரைவில் டைனோசர் அருங்காட்சியகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் பொற்கரங்களால் தொடங்கி வைக்கப்படவிருக்கிறது.  மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் பூம்புகார் சார்பாக ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில் பழந்தமிழர் பண்பாட்டுக்கண்காட்சி, ஐந்திணை பூங்கா கண்காட்சி அமைய பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் வைக்கப்படவேண்டிய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
  இன்று நடைபெற்ற தமிழ்க்கூடல் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மைகள், அதன் சிறப்புகள் குறித்து பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.  இளைய சமுதாயத்தினர் நமது மொழியின் சிறப்பினை தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இது போன்ற தமிழாய்வு கூட்டங்களில் கலந்து கொண்டு நமது தமிழ் மொழியின் தொன்மைகளை பறை சாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
.  முன்னதாக விழாவில் இரண்டாம் காலாண்டிதழ் கையேட்டினை  தமிழ் ஆட்சிமொழி அமைச்சர்   வெளியிட்டார்.
  இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன் , உலகத்தமிழ்ச்சங்கம் இயக்குநர் (பொ.) முனைவர்.க.பசும்பொன்  , மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மேலாண் பேராசிரியர் முனைவர்.கு.சேதுராமன்   உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து