முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை பேரிடர் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த நிவாரணப் பணிகள் தி.மு.க. ஆட்சியில் நடந்ததுண்டா ? முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமான கேள்வி

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

திருவாரூர் : இயற்கை பேரிடர் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்ததை போன்ற நிவாரண பணிகள் தி.மு.க. ஆட்சியல் நடந்தததில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வாழ்வாதாரத்திற்கு...

இதுவரை இல்லாத அளவிற்கு புயலுக்கு அதிக நிவாரண உதவிகளை வழங்கிய அரசு. இதற்கு முன்பாக புயல் எல்லாம் வந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியிலே புயல் வந்திருக்கிறது. அம்மாவுடைய ஆட்சியிலும் வந்திருக்கிறது. அதைவிட கூடுதலான நிவாரண உதவிகளை அரசு அறிவித்திருக்கின்றது. அதேபோல மத்திய அரசிடம் கோரியிருக்கின்றோம். விவசாய பெருங்குடி மக்களுக்கு நெற்பயிருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும். அதேபோல முந்திரி, பலா போன்றமரங்கள், தென்னை மரங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற அறிவிப் புஎல்லாம் ஏற்கனவே அரசு அறிவித்திருக்கிறது. ஆகவே, அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு கொடுப்போம். அவர்கள் மறுவாழ்வு செய்வதற்காக அவர்கள் எந்த பயிரை விரும்புகிறார்களோ, தென்னை பயிர் விரும்புகிறார்கள் என்று சொன்னால் அதையும் வழங்கி, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு உண்டான உதவியும் அரசு செய்யும்.

இந்த புயல் பாதிப்பு சீரமைப்புகளை பொறுத்தவரைக்கும் எதிர்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்களா? இல்லையா? செய்திருக்கிறார்களா?...

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். பத்திரிகையாளர்களுக்குதெரியாதது ஒன்றும் கிடையாது. எங்களிடம் கேள்வி கேட்கிறீர்கள், அங்கேயும் கேள்விகேட்கிறீர்கள். எது சரி என்று நீங்களே சொன்னால் சரி. நீங்கள் நன்றாக பார்க்கிறீர்கள். காலையிலிருந்து இப்போது வரை நிற்காமல் ஒடிக்கொண்டு இருக்கிறோம். வரும் வழியில்எல்லாம், மக்கள் எந்த அளவிற்கு இந்த அரசை நம்பி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குநன்றாக தெரியும அரசை பொறுத்தவரைக்கும் மக்களுடைய அரசு. மக்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அந்த துன்பத்திலிருந்து விடுபடுவற்கு என்னசெய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு இருக்கிறது. போர்க்கால அடிப்படையிலேசெய்து கொண்டு இருக்கிறது. இங்கேயே அமைச்சர் பெருமக்கள். 16-ம் தேதி வந்தார்கள். அதேபோல மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17-ம் தேதி வந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை எங்கேயும் போகவில்லை. இங்கேயே முகாமிட்டு பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் எங்காவது இதுபோல் பணி செய்திருக்கிறார்களா? ஆகவே, அந்த பணி செய்த காரணத்தினாலேதான் மத்தியில் இருந்து வந்த குழு கூட, இந்த நிவாரண பணிகள் சிறப்பாக தமிழ்நாட்டில் செய்யப்பட்டு இருக்கிறது என்று சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆகவே எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் பணிசெய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து