முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 12 மணி நேரம் தொடர் ஆய்வு

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற முதல்வர் நேற்று இடைவிடாமல் 12 மணி நேர ஆய்வு மேற்கொண்டார்.

நாகையில் ஆய்வு...

புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களை பார்வையிட்டு நேற்று முன்தினம் ரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். காலை 8.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். மின்சார சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர்களுடன் கைக்குலுக்கி அவர்களோடு செல்பி எடுத்துக்கொண்டார். புதிதாக அமைக்கப்பட்ட கைப்பம்புகளில் வரும் குடிநீரையும் முகாம்களில் மக்களுக்கு வழங்கப்படும் உணவை ருசிப்பார்த்தார்.

20-க்கும் மேற்பட்ட...

திருத்துறைப்பூண்டியில் சாலையோர டீக்கடையில் அமைச்சர்களோடு டீ சாப்பிட்டார். நாகப்பட்டினம் நகர பஞ்சாயத்தில் இருந்து ஆய்வு பணியை தொடங்கிய முதல்வர் இடிந்த வீடுகள், விழுந்து கிடந்த தென்னமரங்கள் மர, பலா முந்திரிமரங்களை பார்வையிட்டார். பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகளையும் வழங்கினார். நாகப்பட்டினம் நகரத்தில் காலை 8.30 மணிக்கு தனது ஆய்வை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரவு 8.30 மணிக்கு திருவாரூர் நகரத்தில் தனது இடைவிடாத 12 மணி நேர ஆய்வை நிறைவு செய்தார். நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து