முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் தமிழகம் - டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மேலடுக்கு சுழற்சி

தென் தமிழகத்தின் கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலத்தீவு பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

கனமழைக்கு வாய்ப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வட கடலோர பகுதி, புதுச்சேரி, தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சம் 10 செ.மீ. மழை

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்காது. கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வடக்கு நோக்கி சற்று நகர்ந்தால்தான் வட தமிழக பகுதிகளில் மழை பெய்யும். இல்லையென்றால் தென் தமிழக பகுதிகளுக்கே மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொள்ளிடத்தில் 7 செ.மீட்டரும், சிதம்பரம், சீர்காழியில் 6 செ.மீட்டரும், பரங்கிபேட்டை, சேத்தியா தோப்பு, மயிலாடுதுறையில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

12 சதவீதம் குறைவு

அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று(நேற்று) வரை வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் 31 செ.மீட்டர் பதிவாகி இருக்கிறது. இந்த கால கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 35 செ.மீட்டராகும். இயல்பை விட 12 சதவீதம் குறைவாக இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் இருப்பதால் பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து