திருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      ஆன்மிகம்
tirupati laddu 2018 11 30

திருப்பதி, திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி நகரில் கடைகள், வீடுகள், பொது இடங்களில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் திருமலை திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகளில் வைத்தே வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பதி கோயில் நிர்வாகம் சமீப காலமாக ஆலோசனை நடத்தி வந்தது.
இதையடுத்து அட்டை பெட்டிகளில் பிரசாத வழங்குவது ஆலோசிக்கப்பட்டது. இதிலும் நெய்யை உறிஞ்சக் கூடிய சூழல் இருப்பதால் சிக்கல் ஏற்பட்டது. எனினும் நெய்யை உறிஞ்சாத அளவில் தரமான அட்டை பெட்டிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று விதமான அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் லட்டுக்களை வைத்து நெய் உறிஞ்சுகிறதா? என பரிசோதனையும் செய்து பார்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் கூறுகையில், முதலில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் இந்த பெட்டிகளில் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து திருச்சானூர் உட்பட பிற கோயில்களிலும் பிரசாதங்கள் இந்த பெட்டிகளில் வழங்கப்படும். பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப தேவைப்பட்டால் இந்த பெட்டிகளில் மாற்றங்கள் செய்யப்படும் எனக் கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து