ஓபனிங், 6-வது பேட்ஸ்மேன்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை : இந்திய அணி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      விளையாட்டு
Sanjay Bangar 2018 11 30

Source: provided

சிட்னி : ஓபனிங் மற்றும் 6-வது இடத்தில் களம் இறங்குவது யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

358 ரன்கள்...

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பிரித்வி ஷா, விராட் கோலி, புஜாரா, விஹாரி அரைசதம் அடித்து அசத்தினார்கள். லோகேஷ் ராகுல் மட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆராய இருக்கிறோம்...

நேற்று முன்தினம் ஆட்ட நேரம் முடிந்தபின்னர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேட்டியளித்தார். அப்போது ஓபனிங் மற்றும் 6-வது இடத்தில் யார் களம் இறங்குவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘இன்னும் சில இடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்பதை நான் உறுதியாக கூறுவேன். முதல் இன்னிங்சில் 358 ரன்கள் அடித்துள்ளோம். 2-வது இன்னிங்சில் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை கவனமாக ஆராய இருக்கிறோம். அதனடிப்படையில்தான் முடிவு செய்யப்படும்.

முடிவு செய்யவில்லை

மற்ற பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக டாப் ஆர்டரில் களம் இறக்கினோம். சில இடங்கள் உதியாகிவிட்டது. ஒபனிங்கில் யாரை களம் இறக்குவது, 6-வது இடத்தில் யாரை களம் இறக்குவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதுவரை அந்த இடத்திற்கான வீரர்களை நாங்கள் முடிவு செய்யவில்லை.’’ என்றார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து