பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு ஆஸி. லெவன் பதிலடி

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      விளையாட்டு
Levan 2018 11 30

Source: provided

சிட்னி : இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்துள்ளது.

358 ரன்கள்...

இந்தியா - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 2-வது நாளில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா (66), புஜாரா (54), விராட் கோலி (64), ரகானே (56), விஹாரி (53) ஆகியோர் அரைசதம் அடிக்க இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

3-வது நாள் ஆட்டம்

பின்னர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியின் தொடக்க வீரர்கள் டி ஆர்கி ஷார்ட் (74), பிரையன்ட் (62) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்பின் வந்தவர்கள் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்க 7-வது விக்கெட்டுக்கு நீல்சன் உடன் ஹார்டை ஜோடி சேர்ந்தார். இருவரும் அரைசதம் அடித்து 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிரிக்கெட ஆஸ்திரேலியா லெவன் 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து