முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாட்கள் நடைப்பெற்ற இந்தியா - ஆஸி. லெவன் அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் டிரா

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணிகள் மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

மழையால் ரத்து

இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணிகள் மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.  இதன் முதல்நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாளில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா 358 ரன் குவித்து ‘ஆல் அவுட்’ ஆனது. பிரித்விஷா (66 ரன்), கேப்டன் வீராட்கோலி (64 ரன்), ரகானே (56 ரன்), புஜாரா (54 ரன்), விஹாரி (53 ரன்) ஆகிய 5 வீரர்கள் அரை சதம் அடித்தனர். ஆரோன் ஹார்டி 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஆஸி. பதிலடி...

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய லெவன் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்து பதிலடி கொடுத்தது. இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய லெவன் 544 ரன் குவித்து ‘ஆல்ஆவுட்’ ஆனது. நில்சென் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 170 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 100 ரன்களை எடுத்தார். பந்து வீச்சில் கலக்கிய ஆரோன்ஹார்டி பேட்டிங்கிலும் முத்திரை பதித்தார். அவர் 141 பந்தில் 86 ரன் (10 பவுன்டரி, 1 சிக்கர்) எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

‘டிரா’வில் முடிந்தது...

186 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது பிரித்விஷா பீல்டிங்கின் போது காயம் அடைந்ததால் ராகுலுடன் முரளிவிஜய் தொடக்க வீரராக ஆடினார். இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 6-ம் தேதி அடிலெய்டு வில் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து