மெக்சிகோ புதிய அதிபராக ஆண்ட்ரஸ் மானுவேல் பதவியேற்பு

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      உலகம்
Andres Manuel 2018 12 03

மெக்சிகோ சிட்டி, மெசிக்கோ நாட்டின் புதிய அதிபராக ஆண்ட்ரஸ் மானுவேல் பதவியேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் இடையே அதிபராக முதன் முதலாக மானுவேல் பேசியதாவது,

மெக்சிகோ அரசு பேராசை கொண்ட சிறுபான்மையினர் சமூகத்துக்கு ஆதரவாக இருக்காது. ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பேன். வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வறுமையை ஒழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாம் புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும். என்னுடைய முதல் திட்டங்களில் ஒன்றாக ராணுவத்தை பலப்படுத்த வேண்டும். கடற்கரை காவல் துறை, மாகாண போலீசார் ஆகியோரை பலப்படுத்த வேண்டும். வன்முறைகளுக்கு வன்முறை தீர்வாகாது. நம் நாட்டில் நடக்கும் வன்முறைகளை நம் பாதுகாப்புப் படை வீரர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நம் மக்கள் நம்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்தலில் 53 சதவீத வாக்குகள் பெற்று ஆண்ட்ரஸ் மானுவேலின் தேசிய மறுமலர்ச்சி இயக்கம் வெற்றி பெற்றது. மெக்சிகோவில் பல வருடங்களுக்குப் பின்னர், அதிபராக இடதுசாரி கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரஸ் மானுவேல் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து