கலீதா ஜியாவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      உலகம்
Khalida 2018 07 03

டாக்கா, வங்கதேச பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஊழல் வழக்குகளில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி அவரது வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஏற்கெனவே, தேர்தலில் கலீதா ஜியா போட்டியிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

வரும் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தார். போக்ரா மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளிலும், பெனி மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதற்காக அவர் மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், இரு ஊழல் வழக்குகளில் அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட காரணத்தால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து