முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா - சீனா வர்த்தக போர் நிறுத்தம்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

பியுனஸ் அயர்ஸ், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள், புதிய வரி விதிப்புகளை, 90 நாட்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஜூலையில், அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனாவும் அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் ஏற்பட்டது. இரு நாடுகளும், இது தொடர்பாக, பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவின் தலைநகர் பியுனஸ் அயர்சில், பொருளார வளர்ச்சி பெற்ற நாடுகளின் கூட்டமைப்பான, ஜி - ௨௦ அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜிங் பிங்கும் சந்தித்து பேசினர். இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சின் முடிவில், இரு நாடுகளும், புதிய வரி விதிப்புகளை, அடுத்த, 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சம்மதித்தன. இறக்குமதி பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதிக்கு பின் வரி விதிக்க போவதில்லை என ஒப்புக் கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சு மேலும் தொடரும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து