பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      இந்தியா
parliament 2018 10 14

புது டெல்லி, கடந்த ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடை பெற்றது. இதைத் தொடர்ந்து வரும் 11-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் 10-ம் தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளன. இதில் ராமர் கோயில் விவகாரம், ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் விரிவாக விவாதிக்க உள்ளன. இந்த கூட்டத்தில் எடுக்கப் படும் முடிவின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று தெரிகிறது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் 11-ம் தேதி எண்ணப் படுகின்றன. அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து