முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு : முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேட்டி

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய -இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஆனால், இந்த முறை ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்குக்கு வலுசேர்க்கக் கூடிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் அந்த அணி தடுமாறுகிறது. பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு மிரட்டும் வகையில் இல்லை. ஆதலால், இந்த முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் இந்திய அணியும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவாக இருந்து அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறது என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

500 ரன்கள் மட்டுமே...

ஆஸ்திரேலிய அணியுடனான  தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் ஆடுகளம் கடினமாக இருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், நன்றாக எழும்பும். ஆனால், சில நேரங்களில் இந்த சூழல் மாறி இருக்கிறது. கடந்த 1990களில் நான் விளையாடியபோது, பெர்த் ஆடுகளத்தில் யாரும் அதிகமான ரன்கள் அடிக்க முடியவில்லை. இரு இன்னிங்ஸிலும் சேர்த்தே 500 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பெர்த் ஆடுகளத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் பார்த்தால், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக, வேட்டைக்களமாக மாற்றப்பட்டு இருக்கிறது. எளிதாக பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்கிறார்கள். கடந்த முறை இங்கிலாந்து விளையாடிய போது, ஆஸி, இங்கிலாந்து சேர்ந்து 1,300 ரன்கள் சேர்த்தன.

கருத்து கூறுவது சரியல்ல...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டியில் ரோஹித் சர்மா நன்றாகத்தான் பேட் செய்தார். கடைசி நாளில் உணவு இடைவேளை வரை நன்றாக பேட் செய்தார். ஆனால், அதன்பின் விக்கெட்டை இழந்தார். ஒருவேளை விக்கெட்டை இழக்காமல் இருந்தால், ஆட்டத்தின் கதை மாறி இருக்கும். அவர் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடுவது அவசியம். ஆனால், டெஸ்ட் அணியில் ரோஹித் இருக்க வேண்டுமா என நான் கருத்து கூறுவது சரியல்ல. ஓய்வறையில் ஏராளமான விஷயங்கள் நடக்கும். இதை அணி நிர்வாகத்திடமே விடுகிறேன். ரோஹித் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், யார் விளையாட வேண்டும் என்பதை நான் கூற முடியாது.

பொன்னான வாய்ப்பு ...

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும், 350க்கும் அதிகமான ரன்களைக் குவிக்க வேண்டும். அதேபோல் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து ரன் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே ஆஸ்திரேலியா அணி இருந்தது. தற்போது அவர்கள் இல்லாததால் அணி பலவீனமாகி உள்ளது. எனவே இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது. என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து