முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் - டிராவிஸ் ஹெட்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அடிலெய்ட் : இந்திய கேப்டன் விராட் கோலியை எங்களது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று ஆஸ்திரேலிய இடக்கை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய இடக்கை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போதுமான நெருக்கடி...

இந்திய கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவரை எங்களது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர், மூன்று அதிவேக பந்து வீச்சாளர்களை (ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ்) சந்திக்க வேண்டியது இருக்கும். போதுமான நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் தவறிழைத்து ஆட்டம் இழந்து விடுவார். இதை செய்வதற்குரிய பவுலர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

அனுபவம் கிடையாது...

‘இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இடக்கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக நன்றாக பந்து வீசக்கூடியவர், அதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்’ என்று கேட்கிறீர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது பந்து வீச்சை சந்தித்து இருக்கிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பவுலிங்கை அதிகமாக சந்தித்த அனுபவம் கிடையாது. அதே சமயம் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய பேட்ஸ்மேன்கள் எங்களது அணியில் உள்ளனர். பயிற்சி ஆட்டத்தின்போது அஸ்வினின் பந்து வீச்சை நீல்சன் (சதம் அடித்தவர்) சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார். அதனால் அஸ்வினை சமாளிப்பது குறித்து நீல்சனிடம் பேசி அறிந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து