சர்வதேச அணியை வழிநடத்த தெரியாதவர் கிரேக் சேப்பல் : வி.வி.எஸ் லட்சுமணன் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      விளையாட்டு
VVSLaxman 2018 12 03

Source: provided

மும்பை : சர்வதேச அணியை வழிநடத்த தெரியாதவர் கிரேக் சேப்பல். மேலும்,தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே கிரேக் சாப்பல் சலுகை அளித்ததாக விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

சுயசரிதை...

"281-க்கு அப்பால்" என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில், கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது, இந்திய அணி மூன்றாக பிரிந்திருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே அவர் சலுகை அளித்ததாகவும், அவரது பயிற்சி காலம் முழுவதுமே கசப்பு நிறைந்ததாக இருந்ததாகவும் விவிஎஸ் லட்சுமணன் அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலிக்கும், அவருக்கும் இடையே மிகப்பெரிய சண்டை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து