முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் உதவியால் கேரளத்தை மீண்டும் புனரமைப்போம்: பினராய்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : மக்களின் உதவியால் கேரளத்தை மீண்டும் உருவாக்குவோம். இதற்காக அனைத்துப் பிரிவினரிடம் இருந்தும் கருத்துகளும் யோசனைகளும் பெறப்பட்டு அவை தொகுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் இணைந்து 'நவகேரளத்தில் பேரிடர் ஆபத்து குறைப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தின. இதில் கலந்துகொண்டு பேசிய கேரள முதல்வர் பினராய் விஜயன்,

பொதுவாக பெரும் இடர்கள் ஏற்படும் இடத்தில், அரசு இயந்திரமும் தன்னார்வலர்களுமே இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவர். பொதுச்சமூகம் அத்தகைய செயல்களில் அதிகம் ஈடுபடாது. ஆனால் இங்குள்ள நிலை வேறாக இருந்தது. வெள்ளத்துக்குப் பிறகும் நம் மக்களிடையே ஒற்றுமையைக் காண முடிந்தது. வீடுகளைச் சுத்தப்படுத்தி, அவற்றை வாழும் இடமாக மாற்றியது பொது மக்கள்தான். நிவாரணப் பணிகளிலும் ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதன்மூலம் கேரளத்தின் மதச்சார்பற்ற மனப்பான்மை பிரதிபலிக்கிறது. மக்களின் உதவியால் கேரளத்தை மீண்டும் உருவாக்குவோம். இதற்காக அனைத்துப் பிரிவினரிடம் இருந்தும் கருத்துகளும் யோசனைகளும் பெறப்பட்டு அவை தொகுக்கப்படும். அவற்றின் மூலம் கேரளத்தை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து