பேராசிரியை நிர்மலா தேவியை விடுவிக்க கோர்ட் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      தமிழகம்
4 nirmala news

விருதுநகர் : மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கூறிய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியை விடுவிக்க விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் படித்த மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மூவரும்  தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களுக்கு சி.பி.சி.ஐ.டி. தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் இருந்து மூவரையும் விடுவிக்க மறுத்த நீதிமன்றம் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான மூல வழக்கை வரும் 7-ம் தேதிக்கு விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து