முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் 21,395 பயனாளிகளுக்கு ரூ.15.02 கோடி நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் ஓ.பி.எஸ். வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி, - தேனியில் 21,395 பயனாளிகளுக்கு ரூ.15.02 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.
தேனியில் நடைபெற்ற விழாக்களில் 21,395 பயனாளிகளுக்கு ரூ.15.02 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார்.
விழாவில், 20,895 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.76 கோடி மதிப்பீட்டில் மிதிவண்டிகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 149 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.37.25 லட்சம் மதிப்பிலான மானியத் தொகையினையும், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 161 பயனாளிகளுக்கு ரூ.289.80 லட்சம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 190 பயனாளிகளுக்கு ரூ.399 லட்சம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் என மொத்தம் 21,395 பயனாளிகளுக்கு ரூ.15.02 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட  உதவிகளை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.
 இவ்விழாவில் தேனி எம்.பி. ஆர்.பார்த்திபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், கம்பம் எம்.எல்.ஏ. எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா. திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. மாரிமுத்து; மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ந. கணேஷ், ச.ராகவன், வெ.திருப்பதி,  உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், உதவி திட்ட அலுவலர் தண்டபாணி, உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) கருப்பையா, தேனி முன்னாள் எம்.பி. எஸ்.பி.எம்.சையதுகான்  முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.கணேசன்  வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து