முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவார் பயிற்சியாளராக தொடர வேண்டும்: பி.சி.சி.ஐக்கு ஹர்மன்ப்ரீத் -மந்தனா கடிதம்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : மிதாலியின் நீக்கத்துக்கு, பவார் மட்டுமே தனிப்பட்ட முறையில் காரணமல்ல என்று ஹர்மன்ப்ரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார். மேலும்  பவார் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று பி.சி.சி.ஐக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மந்தனா கடிதம் எழுதியுள்ளனர்.

பல்வேறு கேள்விகள்...

வெஸ்ட் இண்டீசில் நடந்த மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) உயரதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து விளக்கம் அளித்தனர். பின்னர், மிதாலி ராஜ், பிசிசிஐக்கு அனுப்பி இமெயிலில் பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளைக் கூறினார்.

நீட்டிக்கவில்லை...

பவாரும் அவரது பங்கிற்கு மிதாலி மீது புகார் தெரிவித்தார். கடந்த 30-ம் ஆம் தேதியுடன் பவாரின் பயிற்சியாளர் ஒப்பந்தம் முடிவடைந்தது. மிதாலி விவகாரத்தில் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை. அத்துடன், மகளிர் அணிக்கான பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே, தற்போது புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பயிற்சியாளராக ரமேஷ் பவாரே தொடர வேண்டும் என்று பிசிசிஐக்கு இமெயில் அனுப்பியுள்ளனர்.

தனிப்பட்ட முறையில்...

“டி-20, ஒருநாள் அணியின் கேப்டனாக, மகளிர் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் தொடர விரும்புகிறேன். டி-20 உலகக்கோப்பைக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ளது. அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து மாற்ற எந்த வித காரணமும் இருப்பதாக தெரியவில்லை. மிதாலியின் நீக்கத்துக்கு, பவார் மட்டுமே தனிப்பட்ட முறையில் காரணமல்ல.” என்று ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார். இதேபோல், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் ரமேஷ் பவாருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், மகளிரி கிரிக்கெட்டில் குழப்பம் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து