முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் ஏலம் வரும் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் ஏலம் வரும் 18 ஆம் தேதி ஜெய்பூரில் நடக்கிறது.

50 இந்திய வீரர்கள்...

ஐ.பி.எல். எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் வெளி நாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில் ரூபாய் கொட்டுகிறது.  இந்நிலையில் 2019-ம் வருடத்துக்கான ஐ.பி.எல். ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெரும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கின்றனர்.

வீரர்கள் மாற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்துக்கு வரவேற்பு இருப்பதால் தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்கும் என்றும் அதனால் விடுமுறை நாட்க ளில் ஏலத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அது மாற்றி வைக்கப்பட்டு ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் அணி மாறிவிட்டனர். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிகாக் விடுவிக்கப்பட்டு, அவர் மும்பை இண்டியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இருந்த அகிலா தனஞ்செயா, முஸ்தபிஷூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வீரர்கள்...

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் உட்பட 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதனால் அந்த புதிய வீரர்களை அதிகமாக இந்த ஏலத்தில் எடுக்கலாம். டெல்லி அணி, கவுதம் காம்பீர் உட்பட சில வீரர்களை விடுவித்துவிட்டது. சன் ரைசர் ஐதராபாத் அணியில் இருந்த ஷிகர் தவான், டெல்லி அணிக்கு மாறியுள்ளார். அந்த அணி விருத்திமான் சாஹா, பிராத்வொயிட் ஆகியோரை விடுவித்துள்ளது. இதே போல மற்ற அணிகளும் சில வீரர்களை விடுவித்தும் புதிய வீரர்களை எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

வெளிநாட்டில் போட்டி...

இரண்டு வருட தடைக்குப் பின் கடந்த ஆண்டு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சீனியர் கிங்ஸ் அணி என்று கலாய்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் தோனி தலைமையிலான அந்த அணிதான் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். தொடர் முடிந்த உடன், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால், இது அதற்கு முந்தைய பயிற்சி ஆட்டமாக, வீரர்களுக்கு இருக்கும். ஐ.பி.எல். நடக்க இருக்கும் நேரத்தில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டி இந்தியாவில் நடக்குமா, வெளிநாட்டில் நடக்குமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து