எரிபொருள் விலை உயர்வை ரத்து செய்தது பிரான்ஸ் அரசு

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      உலகம்
france govt 2018 12 05

பாரீஸ் : போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குப் பணிந்து பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 3 வாரங்களுக்கு முன்பு டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தடுக்கச் சென்ற போலீசாரின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போலீசாரிடமிருந்து கண்ணீர் புகைக்குண்டுகளை பிடுங்கி அவர்கள் மீது போராட்டக்காரர்கள் எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் எட்வர்ட் பிலிப், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வு வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவித்தார். இதையடுத்து அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து