ஸ்லீவ்லெஸ் உடை அணிந்திருந்ததால் ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      உலகம்
women out australia parliament 2018 12 05

சிட்னி : ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இருந்து பெண் பத்திரிக்கையாளர் ஆடை காரணமாக வெளியே அனுப்பப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் பாராளுமன்றம் நடந்து கொண்டு இருந்த போது அங்கு பத்திரிக்கையாளர்கள் இருக்கும் பகுதியில், ஏ.பி.சி. நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் பேட்ரிகா கார்வெலஸும் வந்து அமர்ந்தார். ஆனால் அவரை உடனே அங்கிருந்த அதிகாரிகள் வெளியே செல்லும்படி ஆணையிட்டனர். பின் பாதுகாவலர்கள் உதவியுடன் அவர் வெளியே அனுப்பப்பட்டார்.

பேட்ரிகா கார்வெலஸுக்கு அருகே வந்த பாராளுமன்ற பணியாளர் நீங்கள் அணிந்து இருக்கும் உடை முறையாக இல்லை. அதனால் நீங்கள் வெளியேறலாம் என்று கூறினார். அந்த பத்திரிகையாளர் கைகளை மறைக்காத ஸ்லீவ் லெஸ் உடைகளை உடுத்தி இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை தொடர்ந்து வெளியே வந்த பத்திரிகையாளர் தன்னை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். நான் இந்த உடை அணிந்து இருந்ததால் வெளியே அனுப்பப்பட்டேன் என்று  டுவிட் செய்து இருந்தார். இது தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.

சிலர் ஸ்லீவ் லெஸ் அணிவதில் என்ன தவறு, இதற்கு எல்லாமா வெளியே அனுப்புவார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த பிரச்சனை இதோடு முடியவில்லை. இதனால் தற்போது டுவிட்டரில் எங்களிடம் கொஞ்சம் கைகளை காட்டுங்கள் என்று பொருள்படும் வகையில் ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் பெண்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். பெண்கள் தங்கள் கைகளை புகைப்படம் எடுத்து அதில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து