முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் மூத்த யூ.டியூப் கலைஞர் 107 வயது மஸ்தானாம்மா காலமானார்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : இந்தியாவின் மூத்த யூடியூப் கலைஞரும், வாட்டர்மெலன் சிக்கன் வீடியோவால் புகழ் பெற்றவருமான மஸ்தானாம்மா காலமானார். அவருக்கு வயது 107.

ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தானாம்மாவின் யூ.டியூப் சேனலான கன்ட்ரி புட்ஸ் பக்கம், 12 லட்சம் பேரால் பின் தொடரப்படுகிறது. அவர் செய்து காட்டிய வாட்டர் மெலன் சிக்கன் வீடியோவை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். குண்டூர் மாவட்டத்தின் தெனாலி அருகே குடிவாடா பகுதியைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா. கோபாலே கிராமத்தில் மார்த்தம்மா என்ற பெயரில் வளர்ந்தார். 11 வயதில் தந்தை இறந்து விட, முஸ்லிம் குடும்பத்தினர் அவரைத் தத்தெடுத்தனர். மார்த்தம்மா மஸ்தானம்மா ஆனார்.

தனது 22 வயதில் கணவரை இழந்த மஸ்தானம்மா, 5 மகன்களில் நால்வரைப் பறிகொடுத்தார். தனது ஒரே மகன் டேவிட்டுடன் வசித்து வந்தார் மஸ்தானம்மா. அவரின் பேரனும் கிராபிக்ஸ் டிசைனருமான லக்‌ஷ்மண், பாட்டியின் சமையலை வீடியோவாக எடுத்து யூ.டியூபில் பதிவேற்றினார். குறிப்பாக 2016-ல் அவர் செய்து காட்டிய வாட்டர்மெலன் சிக்கன் வீடியோ இந்திய அளவில் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து மஸ்தானம்மா யூ டியூப் ஸ்டார் ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து