இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      இந்தியா
Babri Masjid 2018 12 04

புது டெல்லி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.அதன் 26-வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனிடையே அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இன்று 6-ம் தேதியை, வெற்றி தினமாகவும் டிசம்பர் 18-ம் தேதி கீதா ஜெயந்தி (பகவத் கீதை) கொண்டாடவும் பல்வேறு இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன.  இந்து அமைப்புகளின் நிகழ்ச்சிகள் மற்றும் முஸ்லிம்களின் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு பைசாபாத் மற்றும் அயோத்தி நகரங்களில் உச்ச கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து