2-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதாவுக்கு கோடியக்கரை கடலில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தர்ப்பணம்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      தமிழகம்
os maniyan tribute jayalalitha 2018 12 05

வேதாரண்யம் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திதி கொடுத்து தர்ப்பணம் செய்தார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சேது கடலில் நீராடினார். பின்னர் திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினார். இதில் நாகை நகர செயலாளர்கள் தங்க கதிரவன். கணேசன், எழிலரசன், எம்.எல்.ஏ. ராதா கிருஷ்ணன், சென்னை பாலாஜி, ஒன்றிய செயலாளர் கிரிதரன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து