முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோயில் விவகாரத்தை வைத்து கலவரம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்: ராஜ்தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டு

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : ராமர் கோயில் விவகாரத்தை வைத்து, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி உதவியுடன் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற கட்சிப் பேரணியில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது:

ராமர் கோயிலின் பெயரால், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும்; அதற்காக அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைஸியின் உதவியை மத்திய அரசு கேட்டுள்ளதாகவும் டெல்லியிலிருந்து தொலைபேசி மூலம் எனக்கு தகவல் வந்துள்ளது. இது மிகவும் தீவிரமான விவகாரம்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களுக்காக குறிப்பிடத்தகுந்த அளவில் எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. இதனால், நாட்டில் கலவரத்தை உருவாக்கி, அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைவதைத் தவிர அக்கட்சிக்கு வேறு வாய்ப்பில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அக்கோயில் கட்டப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. தேர்தலுக்கு பிறகுதான் ராமர் கோயில் கட்டுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்றார் ராஜ் தாக்கரே. எனினும், டெல்லியிலிருந்து தனக்கு தொலைபேசி மூலம் யார் தகவல் அளித்தது? என்பதை அவர் கூறவில்லை.

ராஜ் தாக்கரேவின் கருத்து குறித்து மும்பையைச் சேர்ந்த மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ வாரிஸ் பதான் கூறுகையில், மக்களிடையே பீதியை உருவாக்கும் முயற்சியில், ராஜ் தாக்கரே ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் முக்கியமான தகவல் ஏதும் இருந்தால், அதனை காவல்துறையிடம் தெரிவிக்கட்டும் என்றார்.

இதேபோல், தன்னிடம் முக்கியமான தகவல் இருந்தால், ராஜ்தாக்கரே காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று சிவசேனையும் வலியுறுத்தியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து