மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      தமிழகம்
TN assembly 2018 10 12

சென்னை : தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயர்சிக்கும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வலியுறுத்தி முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

கடும் எதிர்ப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அருகே தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. பெங்களூரு நகரத்தின் குடிநீர் தாகத்தை தீர்க்க இந்த தடுப்பணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிருக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இதற்கிடையில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசின் முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. காவிரி லாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதிக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது.

மாலை 4 மணிக்கு...

இது தொடர்பாக தமிழகத்தின் குரலை ஓங்கி ஓலிக்கும் வகையில் மத்திய அரசின் அனுமதியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இதற்கான கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேகதாது அணை விவகாரத்தை முன்னிறுத்தி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானத்தை முன்வைப்பார் என்று தெரிகிறது.

விவாதங்களில்...

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அபுபக்கர்,  மனிதநேய ஜனநாயக கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு உள்ளிட்டோர் விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து